Friday, December 02, 2005
உணர்வூட்டும் கதை - 3
ஒரு மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார் நகரசபைத் தலைவர். அது ஒரு தொற்றுநோய் சிகிச்சை நிலையம். அங்கிருந்த நர்ஸ் சுறுசுறுப்பாக நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். கைக்கு உறை ஏதும் போட்டுக் கொள்ளவில்லை. அவ்வப்போது குழாயில் கையைக் கழுவிக் கொண்டாள். 'ஏனம்மா கைக்கு உறை போட்டுக் கொள்ளவில்லை? என்று நகரசபைத் தலைவர் கேட்டார். 'உறைகள் தீர்ந்து விட்டன. அடுத்த சப்ளை வரும் வரையில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் வேலை செய்கிறேன்', என்றவள், 'ஆனால் எனக்கு வேறொரு வருத்தம் இருக்கிறது' என்றாள். 'வேறு என்ன வருத்தம்?' என்று நகரசபைத் தலைவர் கேட்டார். 'என்னால் ஐம்பது நோயாளிகளைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இருபத்தைந்து பேரைத்தான் என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்' என்றாள் அந்த நர்ஸ்.
கதைகள் நன்றாக இருந்தனவா. நன்றி ரங்கராஜன். மேலும் ஆரோக்கிய பதிவுகள் தொடர்ந்து வரும்.
கதைகள் நன்றாக இருந்தனவா. நன்றி ரங்கராஜன். மேலும் ஆரோக்கிய பதிவுகள் தொடர்ந்து வரும்.
உணர்வூட்டும் கதை - 2
கடற்கரை ஓரமாக இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டு சென்றபோது ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தை தடித்தது . ஜான் ஜோசப்பை அறைந்தான். அறை வாங்கிய ஜோசப் உடனே, 'ஜான் தன்னை அறைந்தான்' என்று மணலில் எழுதினான். சற்றைக்கெல்லாம் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு, மேலே நடந்தார்கள். பெரிய அலையொன்று எழுந்து தாக்கியதில் ஜோசப் கடலில் விழுந்தான். ஜான் கடலில் குதித்து அவனைக் காப்பாற்றினான். கரைக்கு வந்த ஜோசப், அருகிலிருந்த பாறையில் 'ஜான் என்னைக் காப்பாற்றினான்' என்று செதுக்கினான். திகைத்து நோக்கிய ஜானிடம் ஜோசப் சொன்னான்: 'கெட்டதை மணலில் எழுது. நல்லதைப் பாறையில் எழுது'.
என் கமெண்ட்:
இதே விஷயத்தை திருவள்ளுவர் எவ்வளவு அற்புதமாகச் சொல்கிறார் பாருங்கள் :
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
என் கமெண்ட்:
இதே விஷயத்தை திருவள்ளுவர் எவ்வளவு அற்புதமாகச் சொல்கிறார் பாருங்கள் :
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
Subscribe to Posts [Atom]